sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியரை இடமாற்ற அரசு பள்ளி முன் போராட்டம்

தலைமை ஆசிரியரை இடமாற்ற அரசு பள்ளி முன் போராட்டம்

தலைமை ஆசிரியரை இடமாற்ற அரசு பள்ளி முன் போராட்டம்


UPDATED : பிப் 12, 2024 12:00 AM

ADDED : பிப் 12, 2024 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2024 12:00 AM ADDED : பிப் 12, 2024 09:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செம்பரம்பாக்கம்:
செம்பரம்பாக்கம் ஊராட்சி பாப்பான் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இங்கு தமிழ், கணக்கு பாடங்கள் பயிற்றுவிக்கும் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, நேற்று மதியம் பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர், பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுட்டனர்.இது குறித்து பெற்றோர் கூறியதாவது:
பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லை. தலைமை ஆசிரியராக பணிபுரியும் சேர்ந்த கார்த்திகா, 48, தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களை பயிற்றுவிக்கிறார். இவர், அடிக்கடி விடுப்பு எடுக்கிறார்.முக்கியமாக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு செய்தித்தாள் தலைப்பு கூட வாசிக்கத் தெரியவில்லை. எனவே, தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றி, சேவை மனப்பான்மை உள்ள, தகுதியான தலைமை ஆசிரியரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தகவல் அறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி பராமரிப்பு குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சில் ஈடுபட்டு, தீர்வு எடுப்பதாக கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us