பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:56 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடைபெறும் என, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகள் 79, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் 21, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 67 என, மொத்தம் 167 பள்ளிகள் உள்ளன.செங்கை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 167 மையங்களில் செய்முறை தேர்வு, நாளை துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. இதில், பிளஸ் 2 மாணவியர், 14 ஆயிரத்து 48 பேரும், மாணவர்கள் 11 ஆயிரத்து 772 பேர் என, 25 ஆயிரத்து 820 பேர் எழுதுகின்றனர்.அதேபோல், பிளஸ் 1ல், மாணவியர் 15,000 பேரும், மாணவர்கள் 13 ஆயிரத்து 300 பேர் என, 28 ஆயிரத்து 300 பேர், தேர்வு எழுகின்றனர். முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், இந்த தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.