UPDATED : பிப் 13, 2024 12:00 AM
ADDED : பிப் 13, 2024 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:
சென்னை அருகே மாங்காடில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவதற்காக, கோவில் வளாகத்தில் ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது.இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.