UPDATED : பிப் 13, 2024 12:00 AM
ADDED : பிப் 13, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்கம், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், இளைஞர் இலக்கிய திருவிழா நிகழ்ச்சி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் எழிலி வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இரண்டு நிமிட பேச்சு போட்டி, தமிழ் நுால் அறிமுக போட்டி, இலக்கிய வினாடி வினா, ைஹக்கூ உருவாக்கம், ஓவியப்போட்டி, பொது மொழி - வட்டார வழக்கு எனும் தலைப்பில் விவாத மேடை உட்பட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறப்பாக திறமை காட்டிய மாணவியர், தேர்வு செய்யப்பட்டனர். கல்லுாரி நுாலக அலுவலர் அனுராதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவியர் செயலர் ஜோதிபீரித்தி நன்றி கூறினார்.