பேளாரஹள்ளி அரசு பள்ளியில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்
பேளாரஹள்ளி அரசு பள்ளியில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்
UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 09:16 AM
பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தானியங்கி, மஞ்சப்பை இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.பேளாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேளாரஹள்ளி பஞ்., தலைவர் ராதாமாரியப்பன் தலைமையில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு அரிமா சங்க தலைவர் ராஜாமணி, முன்னாள் தலைவர்கள் கோவிந்தசாமி, சீனிவாசன், இயக்குனர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், மாசு காட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நித்தியலட்சுமி, மாணவர்களிடையே மஞ்சப்பையின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, தானியங்கி இயந்திரம் மூலம், 5 ரூபாய் காயின் செலுத்தி, மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும், இயந்திரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என, பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.