பெரியார் பல்கலை துணைவேந்தர், பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை
பெரியார் பல்கலை துணைவேந்தர், பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 10:27 AM
ஓமலுார்:
பெரியார் பல்கலை துணைவேந்தர், பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய மாணவர் சங்க, சேலம் மாவட்ட செயலர் பவித்ரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனம், கணினி உபகரணங்கள் கொள்முதல், இணையதள தளவாடங்கள் கொள்முதல், இணையதள சேவை கட்டமைப்பு உருவாக்குதல், பட்டியலின மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாயில் முறைகேடு, அமேசான் இணைய முறைகேடு, வளாக பராமரிப்பில் முறைகேடு என, எழுந்த பல்வேறு புகார்களை விசாரிக்க பழனிசாமி ஐ.ஏ.எஸ்., தலைமையில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது.அந்த குழு ஓராண்டு விசாரணை நடத்தி கடந்த, 5ல், தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பதிவாளரான தங்கவேலை, உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என, அரசு உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திக், துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால், அரசின் உத்தரவை மதிக்காத துணைவேந்தரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

