கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்: ஆசிரியை சஸ்பெண்ட்
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்: ஆசிரியை சஸ்பெண்ட்
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:30 AM
தாவணகெரே:
தலைமை ஆசிரியையை பழிவாங்குவதற்காக, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியை, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தாவணகெரே நகரின், மெள்ளெகட்டே கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. பள்ளி மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியை மீது, நடவடிக்கை எடுக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்தினர்.இதை தீவிரமாக கருதிய கல்வித்துறை, பள்ளியின் தலைமை ஆசிரியையை, சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் விசாரணை நடத்திய போது, தலைமை ஆசிரியையை சிக்க வைக்க, சதி நடந்திருப்பது தெரிந்தது.தலைமை ஆசிரியை ஷோபாவுக்கும், ஆசிரியை சாவித்ரம்மாவுக்கும், தனிப்பட்ட முறையில் மனஸ்தாபம் இருந்தது. இதேபோன்று, பள்ளியொன்றில் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.எனவே, தலைமை ஆசிரியை ஷோபாவை பழிவாங்கும் நோக்கில், ஆசிரியை சாவித்ரம்மா, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது, கண்டுபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, அவரையும் சஸ்பெண்ட் செய்து, மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி, நேற்று உத்தரவிட்டுள்ளார்.