சிறுவர் இசை, நாட்டிய விழா கடற்கரையில் இன்று துவக்கம்
சிறுவர் இசை, நாட்டிய விழா கடற்கரையில் இன்று துவக்கம்
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 05:13 PM
புதுச்சேரி:
புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில், இசை நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா, இன்று 15ம் தேதி துவங்கி, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது.இந்த விழாக்களை கடற்கரை சாலையில், முதல்வர் ரங்கசாமி இன்று மாலை 6:00 மணிக்கு துவக்கி வைக்கிறார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ., பாஸ்கர், கலை பண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இசை நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா ஆகியவை கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் எதிரிலும், சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திடலிலும், தினமும் மாலை 6:00 மணி முதல், இரவு 9:30 மணி வரை விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள், தஞ்சாவூர் தென்னகப்பண்பாட்டு மையத்தின் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.