sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்று நாள் பயணமாக கவர்னர் ஊட்டி வந்தார்

மூன்று நாள் பயணமாக கவர்னர் ஊட்டி வந்தார்

மூன்று நாள் பயணமாக கவர்னர் ஊட்டி வந்தார்


UPDATED : பிப் 16, 2024 12:00 AM

ADDED : பிப் 16, 2024 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2024 12:00 AM ADDED : பிப் 16, 2024 09:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
ஊட்டியில் மூன்று நாள் பயணமாக கவர்னர் ரவி நேற்று மாலை ஊட்டி வந்தார். தமிழக கவர்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். பின், சாலை மார்க்கமாக கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6:15 மணிக்கு வந்தடைந்தார். கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.இன்று 16ம் தேதி ஊட்டி அடுத்த முத்தநாடு மந்துவில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். நாளை 17ம் தேதி ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 18 ம் தேதி காலை , 9:00 மணியளவில் ராஜ் பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முன்னதாக கவர்னர் வருகையை ஒட்டி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கவர்னர் வருகையையொட்டி கவர்னர் மாளிகை தாவரவியல் பூங்கா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us