sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இனி 10ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

/

இனி 10ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இனி 10ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இனி 10ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


UPDATED : பிப் 16, 2024 12:00 AM

ADDED : பிப் 16, 2024 05:07 PM

Google News

UPDATED : பிப் 16, 2024 12:00 AM ADDED : பிப் 16, 2024 05:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களும் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் அல்லாமல், மற்ற மொழிகளை விருப்ப பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், அந்த பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதையும் சேர்த்து அவர்களுக்கு 600 மதிப்பெண் கொண்ட தேர்வாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போது வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள். இந்த ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சிக்கான மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே மாணவர்கள் உயர்க்கல்விக்கு செல்கின்றனர்; குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையிலாவது தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டும், தேர்வெழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழ் அல்லாத பிற சிறுபான்மை மொழிகளை கொண்ட மாணவர்கள் விருப்ப பாடத்தை எழுதினாலும் அதில் பெற்ற மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது.600 மதிப்பெண்
ஆனால், இனிமேல், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு புதிய அறிவிப்பின்படி, விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது.விருப்ப பாடத்தின்படி தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அவர்கள் இனி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுடன், 6வதாக தனது விருப்ப மொழி பாடத்திலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அந்த மதிப்பெண்களுடன் சேர்த்து மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான தேர்வாக சான்றிதழில் இடம்பெறும்.மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள் ; 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு (2024-2025) முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us