UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:17 AM
தார்வாட்:
கர்நாடகாவில், 89 வயது முதியவர் பிஎச்.டி., பட்டம் பெற்று அசத்தி உள்ளார்.சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. வயதான காலத்தில் சாதித்தவர்கள் ஏராளமான உள்ளனர். இவர்களில் ஒருவராக 89 வயது முதியவரும் இணைந்து உள்ளார்.தார்வாடின் ஜெயநகரில் வசிப்பவர் தொட்டமணி மார்க்கண்டேயா, 89. தோஹர் சமூகத்தின் வரலாறு, பசவண்ணரின் வாழ்க்கை உட்பட, பல வரலாற்று ஆய்வாளர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, சிவஷரஹன தோஹர காக்யா&' என்ற பெயரில் 150 பக்க புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தை ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தில் உள்ள, கன்னட ஆய்வு துறையில் சமர்ப்பித்தார்.அந்த புத்தகத்தில் இருந்த உண்மை தன்மைகளை சரிபார்த்த பின், தொட்டமணி மார்க்கண்டேயாவுக்கு, ஹம்பி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொட்டமணிக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.கர்நாடகாவில் 89 வயதில் முனைவர் பட்டம் பெற்ற, முதல் நபர் தொட்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.