நீட் ரத்து ரகசியத்தை இன்னும் கண்டுபிடிக்காத திமுக: இ.பி.எஸ்
நீட் ரத்து ரகசியத்தை இன்னும் கண்டுபிடிக்காத திமுக: இ.பி.எஸ்
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:25 AM
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் சுகாதார நிலையங்கள் திறக்கவில்லை என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். 2017 முதல் 2022 வரை புதிதாக 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டதை அவையில் சுட்டிக்காட்டினேன். குருவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்தொகை கிடைக்கவில்லை.கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 90 சதவீத அறிவிப்புகளை திமுக நிறைவேற்றவில்லை. கூட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள் 95 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை.உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான முழு விவரங்களும் பதிலுரையில் இடம்பெறவில்லை. திமுக அரசு பொறுப்பேற்று பிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை கேட்டேன்; பதில் இல்லை.