தாம்பரம் கமிஷனரின் புத்தகம் சிறந்த புத்தகமாக அங்கீகாரம்
தாம்பரம் கமிஷனரின் புத்தகம் சிறந்த புத்தகமாக அங்கீகாரம்
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:31 AM
தாம்பரம்:
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எழுதிய, வெல்ல நினைத்தால் வெல்லலாம்&' என்ற புத்தகம், கல்வியியல் மற்றும் உளவியல் வகைப்பாட்டில், 2020ம் ஆண்டின் சிறந்த புத்தகமாக, தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு, இப்புத்தகத்திற்கான பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன், இவற்றை வழங்கினார்.இந்த புத்தகம், மனம், எண்ணம், குணம், சொல், செயல் மற்றும் பழக்கம் ஆகியவற்றில் புதைந்திருக்கும் வல்லமைகளை விளக்குகிறது. இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தினால், யார் வேண்டுமானாலும் நினைத்ததை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை, வாசகர்களுக்கு தருகிறது.நம் வெற்றி, நம் கையில் உள்ளது என்பதையும், அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள், வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள், சிறகுகள் விரித்திடு, போராடக் கற்றுக்கொள் போன்ற புத்தகங்களையும் எழுதி உள்ளார்.