UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:34 AM
சிவகங்கை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது.சிவகங்கை மருதுபாண்டியர் நகர் கல்வித்துறை கருத்தரங்கு கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். தேர்வுத்துறை உதவி இயக்குனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயசரவணக்குமார், மாரிமுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமார் பங்கேற்றனர். வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வுகளை நடத்தும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர் உள்ளிட்டோருக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்த செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.