UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 10:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் சார்பில் கடந்த 15 நாட்களில், 1253 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இம்மாதம் முதல் 15ம் தேதி வரை, உரிமையியல் நீதிபதி பதவிக்கு, 237 பேர்; உதவி நிலவியலாளர்கள் 40; உதவிப் பொறியாளர்கள் 752; உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் 190 உள்பட, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணிஇடங்களை நிரப்ப, 1253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.