UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 05:41 PM
சென்னை:
திருச்சியிலுள்ள என்.ஐ.டி கல்லூரியில் பிரக்யான் 24 என்னும் தொழில்நுட்ப ஹேக்கத்தான் நிகழ்ச்சி பிப்.,22 முதல் பிப்.,25 வரை நடைபெறுகிறது.மனிக்மா, பைட்ஹாக், ரோபோஸ்பியர், ப்ண்டோரா’ஸ் பாக்ஸ், ப்ரோனெசிஸ், பிக்ஸலெட், மறும் இனோவிக்ஸ் போன்ற நிகழ்வுக் குழுக்கள், மேலாண்மை, குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ், புதிர்கள், யுஐ/யுஎக்ஸ் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் போட்டிகளையும் அதன் மூலம் மாணவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்குகிறது. நோபல் பரிசு பெற்ற டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட்-ன் விருந்தினர் விரிவுரைகள், தொழில்நுட்பங்களின் நடைமுறை அமர்வுகளை பற்றி நடத்தும் பட்டறைகள், 32 மணி நேர ஹேக்கத்தான், டேக்லிங் பிளாக்செயின், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஸ்மார்ட் சிட்டி சவால்கள் மற்றும் இஸ்ரோவின் சந்திரனில் தரையிறக்கும் சிறப்பு நிகழ்வுகள் ஆகியவை பிரக்யான் 24இன் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் ஆகும். மேலும் இதில் இசைகலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.பி.,22 முத. 25 வரை நடைபெறவுள்ள பிரக்யான் 24 நிகழ்ச்சியைப் பற்றி மேலும் அறிய https://pragyan.org/24/ ஐப் பார்வையிடவும்.