UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 05:43 PM
அ நிறம் | அளவு
கோவை:
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேறு பாடங்களுக்கு மாற்றி தரப்பட்டுள்ளது.பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாடத்துக்கும், ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்(மேற்கு) வணிகவியல் பாடத்துக்கும் ஆசிரியர்கள் நிரப்பப்படாது இருந்ததால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் இருந்துவந்தது.இதையடுத்து, உபரியாக மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்றித்தருமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வந்தனர்.
