UPDATED : பிப் 18, 2024 12:00 AM
ADDED : பிப் 18, 2024 08:43 AM
திருப்பூர்:
திருப்பூர் குமரன் கல்லுாரி, ஆடை வடிவமைப்புத் துறை சார்பில், பேஷன் எக்லெட் 2024 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் வசந்தி, கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் தலைமை வகித்தனர். சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி ஆடை வடிவமைப்புத்துறை துறைத்தலைவர் கற்பகம்சின்னம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.கல்லுாரியின் ஆடை வடிவமைப்புத்துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள், 12 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குழுவினரும், பல்வேறு விதமான ஆடைகளை வடிவமைத்து, ஒய்யாரமாக நடந்து வந்து பேஷன் ேஷாவில் பார்வையாளர்கள் கைதட்டல்களை பெற்றனர்.குழு போட்டியில் நாகஸ்ரீ, விஷ்ணுவர்த்தினி, வித்யாஸ்ரீ குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு ஆடை படைப்புகள் என்ற தலைப்பில் மோனிஷா, கவுசல்யா, கீர்த்திகா, தீட்சாகுமரி, அக்கினிஷாபாண்டே, கனிகா பரிசு பெற்றனர்.