தோல்வி பயமே தேர்வில் மதிப்பெண் குறைய காரணம்: லேனா தமிழ்வாணன் பேச்சு
தோல்வி பயமே தேர்வில் மதிப்பெண் குறைய காரணம்: லேனா தமிழ்வாணன் பேச்சு
UPDATED : பிப் 20, 2024 12:00 AM
ADDED : பிப் 20, 2024 11:01 AM
மதுரை:
மாணவர்கள் தோல்வி பயத்தாலே குறைந்த மதிப்பெண் எடுக்கிறார்கள் என எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கக் கூட்டம் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடந்தது. எழுத்தாளர்லேனா தமிழ்வாணன் பேசியதாவது:
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் நாட்களை தேர்வுக்காக மட்டுமே செலவிடுங்கள். தோல்வி வந்தால் அதை கண்டு கலங்ககூடாது. ஒரு மாணவனின் வாழ்வில் கல்வியில் ஓரிரு வருட இழப்புகள் ஒன்றும் பெரிதல்ல.நம் முயற்சிகளை கேலி செய்கிறவர்களை பார்த்து நாம் தயங்கி விடுகிறோம். கடுமையான போட்டிகளை கண்டு அஞ்சி முயற்சியை கைவிடுபவர்கள் உண்டு. போட்டியாளர்களை நமக்கு உத்வேகம் தருகிற சக்திகளாக பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.நன்கு படித்தும் மாணவர்கள் சிலர் குறைந்த மதிப்பெண்கள் எடுக்க காரணம் தோற்றுவிடுவோமா என்ற அச்சத்தில் தேர்வு எழுதுவதுதான். இவ்வாறு பேசினார்.செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.