sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம்

மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம்

மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம்


UPDATED : பிப் 20, 2024 12:00 AM

ADDED : பிப் 20, 2024 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2024 12:00 AM ADDED : பிப் 20, 2024 05:20 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாநகராட்சியில் தயாரிக்கப்படும், 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை வழங்கியுள்ளார்.மத்திய - மாநில அரசுகள் தாக்கல் செய்வதுபோல், ஒவ்வொரு நிதியாண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும். கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.நடப்பாண்டு லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால், அதற்கு முன்னதாக, தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.சென்னை மாநகராட்சியில், பிப்., இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதனால், கோவையிலும் நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் பணியை வேகப்படுத்த, கணக்கு பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, துறை தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது செய்து வரும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் தயாரிக்க, துறை தலைவர்களுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us