தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய ரோபோடிக்ஸ் கண்காட்சி

தேசிய ரோபோடிக்ஸ் கண்காட்சி

தேசிய ரோபோடிக்ஸ் கண்காட்சி


UPDATED : பிப் 21, 2024 12:00 AM

ADDED : பிப் 21, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2024 12:00 AM ADDED : பிப் 21, 2024 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
துடியலுார், வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய கண்காட்சி மற்றும் போட்டி நடந்தது.இந்தியாவின் விப்ரோ பாரி நிறுவனம், சிறந்த திறமையாளர்களை அங்கீகரிப்பதற்காக, இந்நிகழ்வுக்கு ரூ. 2.5 லட்சம் ஸ்பான்சர்சிப் வழங்கியது. அந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை தலைவர் அனில் தேசிங்கே, மனிதவள மேம்பாட்டுதுறை தலைவர் சைதன்ய சிந்தே ஆகியோர், கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.ரோபோ எக்ஸ்போ, ரோபோ ரேஸ், ரோபோ சாக்கர், ட்ரோன் ரேஸ் மற்றும் வினாடி வினா என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த படைப்புகளுக்கு, சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.கல்லுாரி முதல்வர் அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி, ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை தலைவர் முருகராஜன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us