UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி:
ஓட்டேரி, செல்லப்பா தெரு அருகே உள்ள பூங்காவில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின்படி, நின்ற வாலிபரிடம் விசாரித்தனர்.இதில், அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. விசாரணையில் ஓட்டேரி பிரிக்களின் சாலை பகுதியைச் சேர்ந்த சுரேந்தர், 20, என்பதும், கோயம்பேடில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, ஓட்டேரி பகுதியில் விற்றதும் தெரியவந்தது.மேலும், இவர் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பயின்று வந்துள்ளார். சுரேந்தரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.