sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வை சந்திக்க கோவையில் 33,650 பேர் தயார்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை சந்திக்க கோவையில் 33,650 பேர் தயார்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை சந்திக்க கோவையில் 33,650 பேர் தயார்!


UPDATED : பிப் 21, 2024 12:00 AM

ADDED : பிப் 21, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2024 12:00 AM ADDED : பிப் 21, 2024 07:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க, 33 ஆயிரத்து 659 பேருக்கு, ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 127 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சி.இ.ஓ., பாலமுரளி தெரிவித்தார்.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.கோவை மாவட்டத்தில், 363 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 33 ஆயிரத்து 659 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். இவர்களுக்கு, 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு வினாத்தாள்கள், 9 கட்டுகாப்பு மையங்களில் இருந்து, 37 வழிதடங்கள் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.தேர்வு மையங்களில், அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகப்புத்தாள் அடங்கிய விடைத்தாள் தைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பள்ளிகளில் பொதுத்தேர்வு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, காலஅவகாசம் இருப்பதால், மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us