புதிய குற்றவியல் சட்டத்தை விளக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
புதிய குற்றவியல் சட்டத்தை விளக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 10:18 AM
பிரிட்டிஷ் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பார்லிமென்டில் நிறைவேறிய இது தொடர்பான மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டங்களை மாணவர்களிடையே பிரபலப்படுத்தும்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷய சன்ஹிதா ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்.இது தொடர்பாக சுவரொட்டிகள், கையேடுகளை வழங்க வேண்டும். மேலும், மாணவர்கள் எளிதில் பார்க்கும் இடத்தில் இந்த சட்டம் தொடர்பான விளக்கங்களை காட்சிப்படுத்த வேண்டும்.தற்போது பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை வரவழைத்து கருத்தரங்குகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குறிப்பாக இந்த சட்டம் தொடர்பாக பரவியுள்ள சில கட்டுக்கதைகள், பொய் பரப்புரைகளை உடைத்தெறியும் வகையில், விளக்கங்களையும் அளிக்க வேண்டும்.இந்த சட்டங்கள், தனிமனித சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேச விரோத பிரிவு நீக்கப்பட்டு, மிகக் கடுமையான தேசதுரோக பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என, பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.