UPDATED : பிப் 22, 2024 12:00 AM
ADDED : பிப் 22, 2024 08:41 AM
கோவை:
பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது. இதில், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.நடப்பாண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான பொது தேர்வு, மார்ச் மாதத்தில் துவங்குகின்றன. பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்குகிறது.இதில் கோவை மாவட்டத்தில், 33,659 மாணவ - மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 35,975 மாணவ - மாணவியர் பிளஸ் 1 தேர்வும் எழுத உள்ளனர்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று முன் தினம் துவங்கின.வரும் 24ம் தேதி வரை நடக்கின்றன. கோவையில் மொத்தம், 252 தேர்வு மையங்களில் நடக்கும் செய்முறை தேர்வில், 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.