UPDATED : பிப் 22, 2024 12:00 AM
ADDED : பிப் 22, 2024 08:59 AM
சென்னை:
தொடர் உண்ணாவிரதம் மற்றும் போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை, அமைச்சர் கீதா ஜீவன், நேற்று சந்தித்து நலம் விசாரித்ததுடன், போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். அப்போது, எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் கூறினர்.பின், அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், 4 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட, ஐந்து கோரிக்கைளை நிறைவேற்ற, அரசு தயாராக உள்ளது.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, அரசு முயற்சித்து வருகிறது. முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்கின்றனர். எவ்வித தீர்வும் ஏற்படாமல், முதல்வரிடம் எப்படி அழைத்துச் செல்வது? என்றார்.