UPDATED : பிப் 22, 2024 12:00 AM
ADDED : பிப் 22, 2024 09:03 AM
தேனி:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை பதிவு செய்யும் பணிகள் நாளை துவங்குகிறது.மாநிலத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர்.அரசுப்பள்ளி மட்டுமின்றி, உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார், ரேஷன் உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கு ஆதார் எண் இல்லை.அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கி கணக்கு துவங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை (பிப்.,23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.