UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 07:16 AM
தேனி:
தேனி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் உள்ள 12 நுாலகங்கள் ரூ.2.64 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளன.மாவட்டத்தில் ஒரு மைய நுாலகம்,70 கிளை நுாலகம், ஊர்புறநுாலகங்கள் 51 என 122 நுாலகங்கள் செயல்படுகின்றன. இதைத் தவிர பகுதிநேர நுாலகங்கள் 30 செயல்படுகின்றன.இவற்றில் சில பேரூராட்சிப்பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றில் அனுமந்தம்பட்டி, கோம்பை, தேவாரம், மேலசொக்கநாதபுரம், பழனிசெட்டிபட்டி, தேவதானப்பட்டி, காமயகவுன்டன்பட்டி, புதுப்பட்டி, குச்சனுார், வீரபாண்டி, மர்க்கையன்கோட்டை, பூதிப்புரம் ஆகிய 12 பேரூராட்சிகளில் உள்ள நுாலகங்கள் தலா ரூ.22லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.64 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நுாலக கட்டங்கள் சீரமைத்தல், புதிய புத்தகங்கள் வாங்கப்பட உள்ளன.