sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் 50 இடங்களை எடுத்து வாலிபர் சாதனை

/

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் 50 இடங்களை எடுத்து வாலிபர் சாதனை

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் 50 இடங்களை எடுத்து வாலிபர் சாதனை

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் 50 இடங்களை எடுத்து வாலிபர் சாதனை


UPDATED : பிப் 24, 2024 12:00 AM

ADDED : பிப் 24, 2024 05:46 PM

Google News

UPDATED : பிப் 24, 2024 12:00 AM ADDED : பிப் 24, 2024 05:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:
விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில், 360 டிகிரியில் சுழலும் வீடியோவில், 50 இடங்களை எடுத்த ஓசூர் வாலிபர், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் விஜித், 29; கம்ப்யூட்டர் இன்ஜினியர்.இவர், சென்னை தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இந்தியாவில், திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, ஜார்ஜியா ஆகிய நாடுகளில், பல்வேறு முக்கிய இடங்களை, விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவை பயன்படுத்தி, 360 டிகிரியில் சுழலும் வீடியோவை எடுத்துள்ளார். மொத்தம், 16 நிமிடம், 24 வினாடிகளில், 50 இடங்களை வீடியோவில் பதிவு செய்து, அதன் வரலாற்றை மக்கள் அறியும் வகையில் பின்னணியில் பேசியுள்ளார்.மழை, வெள்ளம், பனி, பனிப்பொழிவு என, 4 காலநிலைகளை இந்த வீடியோவில் பார்க்க முடியும். விஜித் எடுத்துள்ள இந்த வீடியோவை, மொபைல்போனில் பார்த்தால், அந்த வீடியோ எடுத்த இடத்தை சுற்றியுள்ள பகுதியை, 360 டிகிரியிலும் சுழலும் வகையில் பார்க்க முடியும்.விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை பயன்படுத்தி, இந்த வீடியோவை பார்த்தால், பார்க்கும் நபர் வீடியோவில் வரும் இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.உலகளவில் முதன் முதலில், 50 இடங்களை இதுபோன்ற வீடியோவில் விஜித் எடுத்ததால், அதை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகம் அங்கீகரித்து, கிரான்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us