sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவில் தரையிறங்கியது அமெரிக்காவின் ஒடிசியஸ்

நிலவில் தரையிறங்கியது அமெரிக்காவின் ஒடிசியஸ்

நிலவில் தரையிறங்கியது அமெரிக்காவின் ஒடிசியஸ்


UPDATED : பிப் 24, 2024 12:00 AM

ADDED : பிப் 25, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2024 12:00 AM ADDED : பிப் 25, 2024 08:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக நிலவில் பிப்.,23ல் தரையிறங்கி சாதனை படைத்தது.அமெரிக்காவை சேர்ந்த, இன்ட்யூட்டிவ் மிஷின்ஸ் என்ற தனியார் நிறுவனம், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்கான விண்கலத்தை, நாசாவுடன் இணைந்து விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்த அந்த விண்கலத்தின், ஒடிசியஸ் எனப் பெயரிடப்பட்ட, லேண்டர் கருவி, நிலவின் தென் துருவம் அருகே நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது.நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பதற்றமான நிமிடங்களுக்கு பின், நிலவில் இருந்து முதல் புகைப்படம் பூமியை வந்தடைந்தது.விஞ்ஞானிகள் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த, 1972ல் அமெரிக்காவின் அப்பல்லோ 17 விண்கலம் நிலவில் முதல்முறையாக தரையிறங்கியது. அதன் பின், 50 ஆண்டுகளுக்கு பின், ஒடிசியஸ் லேண்டர் நிலவில் தரையிறங்கி அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us