சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜை
சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜை
UPDATED : பிப் 25, 2024 12:00 AM
ADDED : பிப் 25, 2024 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 430 மாணவ - மாணவியர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மிகுந்த நினைவாற்றல் பெற்று, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் வழங்க வேண்டி சாலவாக்கம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.சாலவாக்கம் மேல்நிலைப் பள்ளி நிறுவனர், எஸ்.பி.வி., புண்ணியகோட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில், தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி அருளாசி வழங்கப்பட்டது.