sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கீழக்கரை கல்லுாரியில் டைப்ரைட்டிங் தேர்வு இரு நாட்கள் நடந்தது

கீழக்கரை கல்லுாரியில் டைப்ரைட்டிங் தேர்வு இரு நாட்கள் நடந்தது

கீழக்கரை கல்லுாரியில் டைப்ரைட்டிங் தேர்வு இரு நாட்கள் நடந்தது


UPDATED : பிப் 26, 2024 12:00 AM

ADDED : பிப் 26, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2024 12:00 AM ADDED : பிப் 26, 2024 07:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை:
அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் பிப்.24,25ல் ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 5000 பேர் கலந்து கொண்டனர். டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் நேற்று முன்தினம் இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், நேற்று இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் மற்றும் உயர்வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடந்தது.தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகத்தில் 6 மாதம் பயிற்சி பெற்றுள்ளனர். தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலே தகுதி பெறுகின்றனர்.ராமநாதபுரம் மையத்தில் கீழக்கரை முகம்மது சதப் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஷேக் தாவூது, முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகளான சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us