சி.பி.எஸ்.இ., கேள்வித்தாளை 15 நிமிடம் தாமதமாக தருவதால் மாணவர்கள் சிரமம்
சி.பி.எஸ்.இ., கேள்வித்தாளை 15 நிமிடம் தாமதமாக தருவதால் மாணவர்கள் சிரமம்
UPDATED : பிப் 26, 2024 12:00 AM
ADDED : பிப் 26, 2024 09:12 AM
கீழக்கரை:
பிப்.20 முதல் சி.பி.எஸ்.இ.,போர்டு தேர்வுகள் துவங்கி மார்ச் 13ல் நிறைவு பெறும் நிலையில் தேர்வு அறையில் கேளவித்தாளை 15 நிமிடங்கள் தாமதமாக கொடுப்பதால் மாணவர்கள் சிரமமப்படுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.சி.பி.எஸ்.இ., பயிலும் மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
மாணவர்களுக்கு கேள்வித்தாள்களை காலை 10:15 மணிக்கு வழங்க வேண்டும். ஆனால் 10:30க்கு தான் வழங்குகின்றனர். கொடுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் 15 நிமிடம் தாமதமாக வழங்குவதால் மாணவர்கள் அவசரகதியில் தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.எனவே எதிர் வரும் தேர்வு காலங்களில் இது போன்று நடக்காமல் அரசு குறிப்பிட்ட நேரத்தில் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே கேள்வித்தாள்களை வழங்கினால் தேர்வு குறித்த பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத பயனுள்ளதாக இருக்கும்.இவ்விஷயத்தில் முறையாக கண்காணிப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்றனர்.