sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதியில் தங்க வற்புறுத்த கூடாது: மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு

விடுதியில் தங்க வற்புறுத்த கூடாது: மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு

விடுதியில் தங்க வற்புறுத்த கூடாது: மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு


UPDATED : பிப் 27, 2024 12:00 AM

ADDED : பிப் 27, 2024 07:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2024 12:00 AM ADDED : பிப் 27, 2024 07:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
முதுகலை படிப்புகளில் சேரும் மாணவர்களை, விடுதியில் தங்கும்படி வற்புறுத்தக் கூடாது என, மருத்துவக் கல்லுாரிகளுக்கு, தேசிய மருத்துவ கமிஷன் எச்சரித்துள்ளது.தேசிய மருத்துவ கமிஷன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
முதுகலை மருத்துவ படிப்பு கட்டுப்பாடுகள் சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட விதிகளை, மருத்துவக் கல்லுாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இந்த சட்டத்தின்படி, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உரிய விடுதி வசதிகளை கல்லுாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே நேரத்தில், இந்த விடுதிகளில் தங்கியிருந்து தான் படிக்க வேண்டும் என அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.இந்த விதிகளை மீறி, பல கல்லுாரிகள் மாணவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பதாகவும், விடுதியில் தங்குவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.சட்டத்தை மீறி செயல்பட்டால், கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதுடன், கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை இடம் குறைப்பு அல்லது ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us