UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 12:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளில், பிஎச்.டி., எம்.எஸ்., போன்ற ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேரும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகையாக மாதம், 31,000 ரூபாய் வழங்கப்படும்.இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மேலாண்மை, கட்டட அமைப்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில், இந்த சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும், 9ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.