UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
 காரைக்குடி அழகப்பா பல்கலை கழக அறிவியல் துறை வளாகத்தில் இன்று பார்வையாளர் தினம் நடைபெற உள்ளது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, இன்று வளர்ந்த பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பார்வையாளர் தினம் நடக்கிறது.இதில், 19 அறிவியல் துறைகளின் கீழ் அதிநவீன உபகரணங்கள், செயல்பாட்டு விளக்கம், அறிவியல் சோதனை விளக்கம் இடம் பெறுகிறது. இன்று காலை 8:30 மணி முதல் மதியம் 3:00 மணிவரை நடைபெறும் பார்வையாளர் தினத்தில், பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். கண்காட்சியை பல்கலை துணை வேந்தர் க.ரவி துவக்கி வைக்கிறார். அறிவியல் புல டீன் ஜெயகாந்தன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

