UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:34 AM
சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஒன்பது தமிழ் அறிஞர்களுக்கு, இலக்கிய மாமணி விருதுகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.2022 - இலக்கிய மாமணி விருது
கள்ளக்குறிச்சி மாவட்டம் அரங்க. ராமலிங்கம்விருதுநகர் மாவட்டம் கோதண்டம்கோவை மாவட்டம் சூர்யகாந்தன் என்கிற மா.மருதாச்சலம்கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு தேர்வுநீலகிரி மாவட்டம் மணி அர்ஜுனன்திருவாரூர் மாவட்டம் திருவிடம்சென்னை மாவட்டம் பூரணச்சந்திரன்2023 - இலக்கிய மாமணி விருது
கடலுார் மாவட்டம் மாணிக்கவாசகன்திருநெல்வேலி மாவட்டம் சண்முகசுந்தரம்சிவகங்கை மாவட்டம் இலக்கியா நடராஜன்அனைவருக்கும், நேற்றுமுன்தினம் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், 1 சவரன் தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை ஆகியவற்றை, பொன்னாடை அணிவித்து வழங்கி பாராட்டினார்.கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டையொட்டி, தமிழ்ப் பல்கலையில் மொழிப்புலத் துறையில், 7.12 லட்சம் ரூபாய் செலவில், கவிஞர் தமிழ் ஒளி மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வழியே திறந்து வைத்தார்.

