sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிராமண - ஆர்ய வைஸ்ய சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பிராமண - ஆர்ய வைஸ்ய சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பிராமண - ஆர்ய வைஸ்ய சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 10:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 10:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமண - ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த, 4,067 மாணவர்களுக்கு, 5.53 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டன.வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, வருவாய் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமண - ஆர்ய வைஸ்ய சமூக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு, கல்வி உதவித்தொகையை செலுத்தினார்.அவர் கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், பிராமணர் மற்றும் ஆர்ய வைஸ்யர் மேம்பாட்டுக் கழகம் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை, தொழில்முறை படிப்புகளை பயிலும் இரு சங்கங்களை சேர்ந்த 4,067 மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். படித்த பின், சமுதாயத்திற்கு உதவ வேண்டும். கர்நாடக பிராமண மேம்பாட்டு வாரியம் சார்பில், 2023 - 24ம் ஆண்டிற்காக, 2710 மாணவர்களுக்கு 3.78 கோடி ரூபாயும்; கர்நாடக ஆர்ய வைஸ்ய சமூக மேம்பாட்டு கழகம் சார்பில், 1,357 மாணவர்களுக்கு, 1.75 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.தொழில்முறை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய் வரையிலும்; இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு அதிகபட்சமாக 30,000 ரூபாய் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பூர்ணிமா, கர்நாடக ஆர்ய வைஸ்ய சமூக மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தீபாஸ்ரீ உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us