UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 10:24 PM
சென்னை:
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகருக்கு, எம்.எம்.ஏ., அமால்கமேஷன்ஸ் தொழில் முதன்மை விருது வழங்கப்பட்டது.சென்னையில், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் என்ற எம்.எம்.ஏ., அமால்கமேஷன்ஸ், 20வது தொழில் முதன்மை விருது - 2023 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனுக்கு, அமால்கமேஷன்ஸ் குழும தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தொழில் முதன்மை விருதை வழங்கினார்.சந்திரசேகரனின் தனி சிறப்பு மிக்க தலைமைத்துவ பண்பு, மனிதநேயம் மற்றும் தொழில் துறைக்கும், சமூகத்திற்கும் அவர் வழங்கிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகர் பேசியதாவது:
தொழில் வளர்ச்சியில் இந்தியா முன்னோக்கி வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார். தொழில் முனைவோருக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி உள்ளிட்ட நான்கு விதமான இலக்கை கொண்டு செயல்பட வேண்டும்.இந்த விருது எனக்கு மட்டும் கிடைத்ததல்ல; அனைத்து தொழிலாளர்களின் பங்களிப்பால் தான் கிடைத்தது. அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் மகாலிங்கம், செயல் இயக்குனர் விஜயகுமார், ஆடிட்டர் குருமூர்த்தி, டாபே நிறுவன தலைவர்மல்லிகா ஸ்ரீனிவாசன், ஏசியன் பெயின்ட்ஸ் தலைவர் சேஷசாயி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அரவிந்த் ததார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

