sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கொண்டு வர என்ன காரணம்?

/

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கொண்டு வர என்ன காரணம்?

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கொண்டு வர என்ன காரணம்?

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கொண்டு வர என்ன காரணம்?


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 10:27 PM

Google News

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவிற்கான காரணம் தெரியவந்துள்ளது.இஸ்ரோவுக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் 2வது ஏவுதளம் அமைக்க, தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில், 2,233 ஏக்கரில் இஸ்ரோ இடம் தேர்வு செய்யப்பட்டது.குலசேகர பட்டினம் ஏன்?
* ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும்.* ஏவப்படும் விண்கலம் தென்துருவத்தை நோக்கி, கிழக்குக் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும்.* ஏவுகலத்திலிருந்து பிரிந்து விழும் பாகங்கள் கடலில் விழ வேண்டும்.* பூமியின் சுழல் வேகம் 0.5 கி.மீ.,/ நொடி கூடுதலாகக் கிடைக்கும். இதனால், அதிக எடை கொண்ட விண்கலங்களை அனுப்ப முடியும்.* காற்றின் வேகம் 30 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும்.* குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாக இருக்க வேண்டும்.புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும்.* ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்களின் பாகங்கள், இலங்கையில் மக்கள் வசிப்பிடத்தில் விழாமல் இருக்க, &'Dogleg Maneuver&' என்ற முறையில் வளைந்து செல்லும் படி அனுப்பப்படுகிறது. இதனால், எரிபொருள் செலவு கூடுகிறது.* பூமத்திய ரேகையில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் ஸ்ரீஹரிக்கோட்டா உள்ளது. 8.36 டிகிரி வடக்கில் உள்ளது குலசேகர பட்டினம். இதனால், இங்கிருந்து ராக்கெட்களை ஏவினால் எரிபொருள் செலவு குறையும்.* ராக்கெட்டின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.* குலசேகரபட்டின ஏவுதளம் அருகில், விண்வெளி தொழில் பூங்கா தொடங்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us