புத்தகங்கள் இல்லாத கிளை நுாலகம் சீரமைக்கப்பட்டும் பயனில்லாத அவலம்
புத்தகங்கள் இல்லாத கிளை நுாலகம் சீரமைக்கப்பட்டும் பயனில்லாத அவலம்
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 08:44 AM
கடம்பத்துார்:
மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி.இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கிளை நுாலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நுாலகம் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து பூட்டியே கிடந்ததால் நுாலக வாசகர்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கிளை நுாலகம் ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்கபட்டது. இந்த நுாலகம் சீரமைக்கப்பட்டு இரு ஆண்டுகளாகியும் புத்தகங்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.கிளை நுாலகம், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவது நுாலக வாசகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் கிளை நுாலகத்தை புத்தகங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நுாலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

