போட்டித்தேர்வு பயிற்சி மையம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
போட்டித்தேர்வு பயிற்சி மையம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 08:57 AM
சென்னை:
திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிபட்டியில் 10.15 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டு உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காளஞ்சிபட்டியில் நான்கு ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் இரண்டு பயிற்சி வகுப்பறைகள், பணியாளர் அறை, பயிற்றுநர் அறை, கணினி ஆய்வகம், நுாலகம், கருத்தரங்க கூடம், கணினி நுாலகம் ஆகியவை உள்ளன.இங்கு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறந்த வல்லுனர்களை வைத்து ஆண்டு முழுதும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இம்மையத்தை பிப்.27ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் வழியே முதல்வர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

