UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:01 AM
உலக கடல்சார் அறிவியல் மாநாடு - 2024, சென்னை, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மைய வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதில், கடல்சார் மீன் வளம், வணிகம் சார்ந்த, 400 பக்கங்கள் கொண்ட ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. மாநாடு இறுதி நாளான நேற்று, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
நம் நாட்டு கடற்கரை, 8,000 கி.மீ., நீளம் கொண்டது. 2014ம் ஆண்டுக்கு பின், கடல்சார் துறையில் 38,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. மீனவர்கள் கடலை பாதுகாக்க முன்வருவதுடன், அதற்கான முயற்சியும் எடுத்துள்ளனர்.அந்தமான் கடற்பரப்பில் மீன்வளம் அழிந்து வருகிறது. அங்கு, மீன் பிடிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கடல்பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்த, ராமேஸ்வரத்தில் கடல்பாசி பூங்கா அமைத்துஉள்ளோம்.மீன்பிடி துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். டிஜிட்டல் மயமாக்கியதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் இலக்கை வைத்து இத்துறை செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

