UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
சுற்றுலாத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் இணைந்து ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கலெக்டர் ஷஜீவனா கொடி அசைத்து சுற்றுலாவை துவக்கி வைத்தார். வீரபாண்டி, சுருளி அருவி பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அவர்களடன் சிறப்பாசிரியர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமட்சி உள்ளிட்டோர் பயணித்தனர். துவக்க விழாவில் சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் பாஸ்கரன், வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

