UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 08:44 AM
உடுமலை:
உடுமலை அரசுப்பள்ளிகளில், நேற்றுமுன்தினம் முதல் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.புதிய கல்வியாண்டு, 2024 - 25க்கான மாணவர் சேர்க்கையை துவங்குவதற்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அதற்கான பணிகள் நடக்கிறது.உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று முன்தினம் முதல் சேர்க்கை துவங்கியது. சுற்றுப்பகுதி பள்ளி தலைமையாசிரியர்கள் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களிலும் அரசுப்பள்ளிகளின் சிறப்பு திட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.கிராம ஊராட்சிகளில், 5 வயது நிறைவடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் பள்ளியில் சேர்ந்துள்ள விபரங்களையும் ஆசிரியர்கள் சேகரிக்கின்றனர்.மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் பணி செய்யும் பண்ணைகள், தொழிற்சாலைகளிலும் ஆசிரியர்கள் ஆய்வு செய்கின்றனர்.

