UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 05:34 PM
விருதுநகர்:
மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பில் இடைநிற்றல் ஆன 1049 மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் 2ம் கட்ட சிறப்பு களச் செயல்பாடு மார்ச் 5ல் அனைத்து வட்டாரங்களிலும் நடக்க உள்ளது.மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 10ம் வகுப்பில் 388 மாணவர்களும், பிளஸ்1ல் 135 மாணவர்களும், பிளஸ் 2வில் 233 மாணவர்களும் என மொத்தம் 756 இடைநிற்றல் மாணவர்கள் கண்டறிப்பட்டு, முதற்கட்டமாக பிப். 24ல் கலெக்டர், எஸ்.பி., டி.ஆர்.ஓ., உள்ளிட்ட 80 அலுவலர்கள் தனித்தனியாக கள ஆய்வு செய்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.2ம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 6ம் வகுப்பில் 110 மாணவர்கள், 7ம் வகுப்பில் 150, 8ம் வகுப்பில் 223, 9ம் வகுப்பில் 565 என 1049 இடைநிற்றல் மாணவர்களை 175 அலுவலர்கள் தனித்தனியாக நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

