UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 04:39 PM
திருச்சி:
பிரதமர் மோடி, 2047ல் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்தார்.மத்திய பொதுத்துறை நிறுவனமான திருச்சி பாய்லர் தொழிற்சாலையான பெல் நிறுவனத்தில், நேற்று, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சந்திரயான் 3ல் பொருத்தப்பட்ட பைமெட்டாலிக் அடாப்டரை தயாரித்த பெல் நிறுவன ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.அவர் கூறியதாவது:
நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது. சந்திரயான்- 3 வெற்றிக்காக, திருச்சி பெல் நிறுவனம் பெரும் பங்காற்றி உள்ளது. பிரதமர் மோடி, 2047ல், இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.தற்சார்பு இந்தியா திட்டத்தில், பல்வேறு துறைகளின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. அதில், இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. விரைவில், உலகிலேயே 20 சதவீதம் எத்தனால் பயன்படுத்தக்கூடிய முதல் நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

