முழுமையான ஆய்வுகள் தேவை அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி
முழுமையான ஆய்வுகள் தேவை அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:43 AM
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் வரலாற்றுத் துறை, வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று, சிந்து முதல் பொருநை வரை என்ற மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.இதில், இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழர்களின் பழமையை பற்றி பேசி வருவது இலக்கியத்தின் அடிப்படையில் தான். இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சிகள், சங்க இலக்கியங்களில் கூறப்படும் கலாசாரங்களை நிரூபித்துள்ளன.டெல்டா மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது. ஆனால், இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்கள், தொடர்ந்து இயங்கி வரும் இடமாக அமைந்திருக்கின்றன. இங்கு தொல்லியல் எச்சங்களைக் கண்டறிவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.நெற்களஞ்சியமாகத் திகழும் இப்பகுதியில், சிறந்த நாகரிகம் தோன்றியதற்கான ஆதாரங்கள், இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்வதன் வாயிலாக தான் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

