ரஷ்ய மருத்துவ பல்கலையில் சீட்: ரூ.6.45 லட்சம் மோசடி
ரஷ்ய மருத்துவ பல்கலையில் சீட்: ரூ.6.45 லட்சம் மோசடி
UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:42 AM
மதுரை:
துரையைச் சேர்ந்தவருக்கு ரஷ்ய மருத்துவ பல்கலையில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.6.45 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை ராஜா மில் ரோடு மணி நகர் பாண்டியராஜன் 55. கட்டட ஒப்பந்ததாரர். இவரது மகன் கோகுல், ரஷ்யாவில் உள்ள மருத்துவ பல்கலை ஒன்றில் 2018 ல் படித்தார். அப்போது அங்கு நிலவிய மைனஸ் 30 டிகிரி குளிரால் படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பினார்.பின்னர் பாண்டியராஜனுக்கு அறிமுகமான இர்பான் சுல்தான், ரஷ்யாவின் மாஸ்கோவில் ஒரு மருத்துவ பல்கலை இருப்பதாகவும் அங்கு தனக்கு தெரிந்த பிந்தி சுல்தான் 4ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறினார். அவர் அப்பல்கலையில் சீட் வாங்கி கொடுப்பார் எனக்கூறியதை நம்பி பல தவணைகளில் மொத்தம் ரூ.6.45 லட்சம் பிந்தி சுல்தானுக்கு அனுப்பி ஏமாந்தார். இதுதொடர்பாக இர்பான் சுல்தான், பிந்தி சுல்தான் மீது திலகர்திடல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

