டிவி பெட்டி அறையை அகற்றிவிட்டு பள்ளி கட்டடம் அமைக்க கோரிக்கை
டிவி பெட்டி அறையை அகற்றிவிட்டு பள்ளி கட்டடம் அமைக்க கோரிக்கை
UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 04:04 PM
குளித்தலை:
அங்கன்வாடி பள்ளிக்கு போதிய இட வசதி இல்லாததால் டிவி பெட்டி அறையை அகற்றிவிட்டு பள்ளி கட்டடம் அமைக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி 9 வது வார்டு பொதுமக்கள் சார்பில், கலெக்டர் மற்றும் முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பஞ்சப்பட்டியில் தனியார் குடியிருப்பில் அங்கன்வாடி குழந்தைகள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 15 குழந்தைகள் பயின்று வருகின்றனர். போதிய இட வசதி இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் பயன்பாட்டுக்கு இல்லாத டிவி பெட்டி அறை உள்ளது.இந்த இடத்தில் அரசு மூலம் அங்கன்வாடி பள்ளி அறை கட்டடம் கட்ட வேண்டும்.மேலும், இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்த வெளியில் விடுவதால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.பொதுவெளியில் திறந்து விடப்படும் கழிவுநீரை தடுத்து, பொது கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

